யாழ் மண்டைதீவு 2 ம் வட்டாரத்தைச் சேர்ந்த, அமரர் திருமதி சிவப்பிரகாசம் ஜெயலட்சுமி (ஆசிரியர் )அவர்களின் 15வது ஆண்டு சிராத்ததினம் 09.01.2017 திங்கட்கிழமை அன்று அனுஸ்டிக்கப்பட்டது.
அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு-யாழ் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் முதியோர் இல்லத்தைச் சேர்ந்த முதியவர்களுக்கு ஒரு நாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
அன்னையின் மடியில்- 29.05.1936. ஆண்டவன் அடியில் -09.01.2002.
திதி -09.01.2017.
முண்ணூறு நாள் சுமந்து முழுமனதாய் வளர்த்து கண்ணினை இமை காப்பது போல் காத்திருந்த தாயே தங்களின் நினைவுகளை நினைத்து நினைத்து நீங்காத. நினைவுகளுடன் தங்களின் ஆத்மா சாந்திக்காய் உங்கள் மனம் நிறைந்த முருகப்பெருமானின் அருளை நாடி நிற்கின்றோம் . என்றும் பக்தியுடன் உங்கள் !!!
பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்…