இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும்-வீதி புனரமைப்புத்திட்டத்தின் கீழ் தீவக பிரதான வீதிகள் யாவும் படிப்படியாக அகலப்படுத்தப்பட்டு காபட் வீதியாக மாற்றப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, வேலணை வங்களாவடி ஊடாக, ஊர்காவற்றுறை நோக்கிச் செல்லும் பிரதான வீதியினை-அகலப்படுத்தி காபட் வீதியாக மாற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது வேலணை மத்திய கல்லூரிக்கு முன்பாக-காபட் வீதியின் பணிகள் நடைபெறுவதனை கீழே இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம்.