மழை நீர் சேகரிப்பு திட்டம்-யாழ் மாவட்டம்….
இலங்கை அரசின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைமையில், மழை நீர் சேகரிப்பு திட்டம்-யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களினதும் -முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் மற்றும்-வட மாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் பங்களிப்பில், தீவகம் வேலணை பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளில் சுமார் 200 மழை நீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நயினாதீவு பகுதியில் 41 மழை நீர் சேகரிப்புத் தொட்டிகள் . J 34,J35,J36 ஆகிய கிராம அலுவலர்கள் பிரிவுகளில் அமைக்கபட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.
நிழற்படங்கள்…நயினை எம்.குமரன்