ஆங்கில புதுவருடத்தினை முன்னிட்டு-01.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் முதியோர் இல்ல முதியவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டதுடன் மேலும் சிறப்புணவும் வழங்கப்பட்டது.
இங்கு முதியவர்கள்,ஆதரவற்ற மாணவர்கள்,பணியாளர்கள் என மொத்தம் 60 பேர் வசிக்கின்றார்கள்.இவர்கள் அனைவருக்கும் புது ஆடைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள்-தமது உடல் நலக்குறையையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டு-முதியோர்களுக்கு புத்தாடைகளை தனது கரங்களினால் வழங்கி வைத்தார்.
முதியோர்களுக்கான புத்தாடைகள் வழங்குவதற்கு-கனடாவில் வசிப்பவர்களான-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு அலெக்சாண்டர் றெஜி மற்றும் மீசாலையைச் சேர்ந்த,திரு கனகசபை விக்னேஸ்வரன் மற்றும் பரந்தனைச் சேர்ந்த,அமீர் சந்திரகுலராஜா ஆகியோர் இணைந்து 37 ஆயிரம் ரூபாக்களை வழங்கியிருந்தனர். அவர்களுக்கு எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அடுத்து இரு இடங்களில் சிறப்புணவு வழங்குவதற்கான நிதியினை -பரிஸ் வர்த்தகப் பெருமகன் திரு தம்பு வினோதாஸ் அவர்கள் வழங்கிருந்தார்.அவருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இரண்டாவது அறப்பணியின் நிகழ்வாக-கைதடியில் அமைந்துள்ள விழிப்புலன் இழந்தவர்கள் தங்கியுள்ள தொழில் பூங்காவிலும் சிறப்புணவு வழங்கப்பட்டது.
இந்த இரண்டு நிகழ்வுகளிலும்-எமது அறப்பணிக்குடும்பத்தைச் சேர்ந்த, திரு இ.சிவநாதன் மற்றும் வி.குருபவராசா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.அவர்களுக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.