அல்லைப்பிட்டி பங்கின் ஒளிவிழா நிகழ்வும் வருடாந்த பரிசளிப்பு விழாவும், வியாழக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.
குறித்த விழாவானது வியாழன் மாலை 6.00 மணியளவில்,அல்லைப்பிட்டி அருட்பணி ஜிம்பிறவுண் அரங்கில்,அல்லைப்பிட்டி மற்றும் மண்டைதீவின் பங்குத் தந்தை அருட்பணி டேவிட் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் நா.திவ்யலக்சன், அல்லைப்பிட்டி ரோமன் கத்தோலிக்க வித்தியால அதிபர் கெ.பத்மநாதன், அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியால அதிபர் வ.நவரட்ணராஜா,கௌரவ விருந்தினர்களாக சமுர்த்தி உத்தி யோகத்தர் வெஸ்ஸி புஸ்பராசா,அல்லைப்பிட்டி தொழிலாளர் சங்கத் தலைவர் அ.சிலுவைராசா,புனித பிலிப்பு நேரியார் தேவாலய செயலாளர் அ.அருள்ஜெகின் ஆகியோர் கலந்து சிறப்பித்திருத்தனர்.
நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன்,அல்லைப்பிட்டி ரோமன் கத்தோலிக்க வித்தியால மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன.குறித்த மாணவர்களுக்கான பரிசில்களை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வழங்கி கௌரவித்தார்.
நிகழ்வில் பொது மக்கள்,மாணவர்கள்,ஆசிரியர்கள்,தேவாலய பொறுப்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.











