அல்லையூர் இணையம்,ஆதரவற்ற மாணவர்களுக்காக, நடத்தும் பொங்கல் விழாவிற்கு ஆதரவு தர முன் வாருங்கள்-விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம்,ஆதரவற்ற மாணவர்களுக்காக, நடத்தும் பொங்கல் விழாவிற்கு ஆதரவு தர முன் வாருங்கள்-விபரங்கள் இணைப்பு!

578175_142818142509816_100003448945950_101643_1241109046_n

கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்ற,தைப்பொங்கல் விழாவிற்காக-அல்லையூர் இணையம் திரட்டிய நிதியினை-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மூலம் நேரடியாக மகாதேவா ஆச்சிரம நிர்வாகத்திடம்  ஒப்படைத்ததுடன்-அல்லையூர் இணையத்தின் சார்பில் பல இளைஞர்களும் மற்றும் மண்டைதீவைச் சேர்ந்த,சமூக ஆர்வலர் திரு.வசந்தரூபன் அவர்களும் நேரடியாகச் சென்று பொங்கல் விழாவினைச் சிறப்பாக நடத்தி மாணவர்களின் சந்தோசத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு தைப்பொங்கல் விழாவிற்காக-ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாக்களும்

கடந்த 2014 ,2015 ,2016 ம் ஆண்டுகளில் தைப்பொங்கல் விழாவிற்காக-90 ஆயிரம் ரூபாக்களையும்,உங்களிடமிருந்து திரட்டி மகாதேவா ஆச்சிரம நிர்வாகத்திடம் -அல்லையூர் இணையம் வழங்கியிருந்தது-இதற்கான பற்றுச்சீட்டுக்களும் அன்று எமது இணையத்தில் விபரமாக பதிவு செய்யப்பட்டிருந்தன.

பொங்கல் விழா-2017

அன்பான கருணை மிக்க உள்ளங்களே!

இம்முறை, அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின்  ஏற்பாட்டில் 14-01-2017  சனிக்கிழமை அன்று  ஆதரவற்ற மாணவர்கள் ,விழிப்புலன் இழந்தவர்கள், விஷேட தேவைக்குட்பட்டவர்கள் என ஆதரவற்றவர்கள் தங்கியுள்ள நான்கு இடங்களில் தைப்பொங்கல் விழாவினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

தைப்பொங்கல் விழாவினை சிறப்பாக நடத்திட- கருணைமிக்க உள்ளங்களிடமிருந்து நம்பிக்கையோடு நிதி உதவியினை  எதிர்பார்க்கின்றோம்.

அனைத்து தொடர்புகளுக்கும்*****0033651071652 

மின் அஞ்சல்*******info@allaiyoor.com

வைபர்********    0033651071652 

1916126_1182132905148483_7303429750449149984_n 971283_1182134288481678_8721239607495091466_n 1465131_1182132961815144_5584460170380874388_n

Picture-039-680x1024111 (27)111 (41)111 (44)111 (36)

 

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux