அல்லையூர் இணையம் மேற்கொண்டு வரும்-ஆயிரம் தடவைகள் அன்னதானம் என்னும் பசி தீர்க்கும்-அறப்பணியின் தொடர்ச்சியாக நத்தாரை முன்னிட்டு 25.12.2016 அன்று இரண்டு சிறப்புணவு வழங்கப்பட்டதுடன் மேலும் 27.12.2016 வியாழக்கிழமை அன்று வேலணையை சேர்ந்தவரும் கனடா நாட்டில் வசித்து வருபவருமான திரு இராசதுரை மோகன்ராஜ் அவர்களின் அன்பு மகன் செல்வன் ஆகிஷ் அவர்களின் 13வது பிறந்த தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கப்பட்டன.
விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வு 01
லண்டனில் இயங்கும் PIMLICO SHOPPER என்னும் பல்பொருள் வியாபார நிலையத்தின் அனுசரணையில் நத்தார் தினத்தன்று மகாதேவா மாணவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.
நிகழ்வு-02
வடமாராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில்-வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு-அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்களின் நிதி அனுசரணையில்-நத்தார் தினத்தன்று சிறப்புணவு வழங்கப்பட்டது.
நிகழ்வு-03
வேலணையை சேர்ந்தவரும் கனடா நாட்டில் வசித்து வருபவருமான திரு இராசதுரை மோகன்ராஜ் அவர்களின் அன்பு மகன் செல்வன் ஆகிஷ் அவர்களின் 13வது பிறந்த தினத்தினை முன்னிட்டு 29.12.2016 வியாழக்கிழமை அன்று கிளிநொச்சி வன்னேரிக்குளத்திலுள்ள யோகர் சுவாமிகள் முதியோர் இல்லத்திலுள்ள முதியவர்களுக்கு ஒரு நாள் சிறப்புணவு வழங்கப்பட்டதுடன் மேலும் கிளிநொச்சி இரத்தினபுரத்திலுள்ள விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பு இல்லத்தில் பராமரிக்கப்படும் சிறுவர்களுக்கும் ஒருநாள் சிறப்புணவு வழங்கப்பட்டது. இங்கு மாலையில் இல்லச் சிறார்கள் மற்றும் பணியாளர்களும் கேக் வெட்டி செல்வன் ஆகிஷின் பிறந்த நாளினை கொண்டாடி வாழ்த்தி மகிழ்ந்தனர்.
செல்வன் ஆகிஷ் அவர்களை அல்லையூர் அறப்பணிக்குடும்பத்தினரின் சார்பில் வாழ்த்துவதுடன் மேலும் இன்றைய சிறப்புணவு வழங்க நிதியுதவி செய்த இராசதுரை மேகன்ராஜ் குடுப்பத்தினர்களுக்கு இரண்டு இல்லங்கள் சார்பாகவும் அல்லையூர் .இணையத்தின் அறப்பணி குடும்பம் சார்பாகவும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.