காலதேவன் கருணை மறுத்த ஈழ தேசத்தின் கரையோர பிரதேசங்களின் வாழும் ஏழை மக்களின் வாழ்கை என்றும் நீர்குமிழி போலதான். பஞ்ச பூதங்களும் இவர்கள் வாழ்கையை பலமுறை பந்தாடி இருக்கிறது. இறுதியாக கடல் நீர் சூடாக்கி மேலெழுந்து அதுவேகமாய் ஆழிப்பேரலையாய் ஓடி வந்து எம் இனக்குருத்துக்களை காவி கொண்டு சென்று இன்று 12 ஆண்டுகள் முடிவடைந்து உள்ளது.
தாயை இழந்த பிள்ளைகள் ,தந்தை இழந்த பிள்ளைகள், இருவரையுமே இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றவர்கள் என்று இழப்பு என்பது எம் கரையோர மக்கள் எல்லோர் வாழ்கையிலும் சங்கமித்து இருந்தது.கால் நூற்றாண்டுகாலமாக போர் தந்தவடுக்களால் பொய்யாகி போய் இருந்த அவர்கள் வாழ்க்கை.கடல் அலை தந்த கடும் காயங்களால் காணாமலே போய்விட்டது ,,,,,,,இயற்கையும் எம்மை இரக்கம் இன்றி துரத்திகொண்டே இருக்கின்றது ,,,,இன்றும் ஆகாய வெள்ளம் எம் உறவுகளை தாயகத்தில் அவலப்பட செய்துகொண்டு இருக்கிறது ,,,,,,நாம் என்ன செய்வோம் ,,,,காலம் வகுத்த நியதி என்று கண்ணீர் மட்டுமே விட்டு எம் கவலைகளை துடைத்துகொள்வோம் ,,,கால நீரோட்டத்தில் அந்த 2004 ,12,26 அதிகாலையில் ஆழிபேரலை அபகரித்து சென்ற எமது ஆருயிர்களின் ஆத்மா சாந்தி பெற வேண்டி எல்லோரும் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி !!!