அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,நாட்டுக்கூத்துக் கலைஞர் திரு கபிரியேல் பிலேந்திரன் அவர்கள் கலாபூஷணம் விருது பெற்றார்-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,நாட்டுக்கூத்துக் கலைஞர் திரு கபிரியேல் பிலேந்திரன் அவர்கள் கலாபூஷணம் விருது பெற்றார்-படங்கள் இணைப்பு!

image-0-02-06-c497f7f20555f3d4de3e9b87a7fc00289c0d51078fd0b6d524f467452e91df17-v

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,நாட்டுக்கூத்துக் கலைஞர் திரு கபிரியேல் பிலேந்திரன் அவர்கள்-இலங்கை அரசினால், வருடம் தோறும் தெரிவு செய்யப்படும் கலைஞர்களுக்கு  வழங்கப்பட்டு வரும் கலாபூஷணம் என்னும் விருதினைப் பெற்று-அல்லைப்பிட்டி மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

பெரியவர் கபிரியேல் பிலேந்திரன் அவர்கள் நீண்ட காலமாக ,நாட்டுக்கூத்துக் கலையில் தன்னை ஈடுபடுத்தி வந்தார் என்று மேலும் தெரிய வருகின்றது. மேலும்  கலைவாருதி,யாழ்முத்து,கலாபூஷணம் ஆகிய விருதுகளைப் பெற்று அல்லைப்பிட்டி மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.பெரியவர் பிலேந்திரன் அவர்கள்-அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் ஆலய மூப்பராகவும்  பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரசினால் ,  கடந்த வருடம்  (2015 ) வழங்கப்பட்டகலாபூஷணம் விருதினை-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் பெற்றிருந்தார்-என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கலாபூஷணம் விருது 2016

நாட்டின் கலை வளர்ச்சிக்காக தங்களின் வாழ் நாட்களை அர்ப்பணித்து சேவையாற்றிய கலைஞர்களை கௌரவித்து வழங்கப்படுகின்ற கலாபூஷணம்  என்னும்  விருது வழங்கும் விழா இவ்வருடம் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி கொழும்பு 7 இல் அமைந்துள்ள நெலும் பொக்குண சர்வதேச கலையரங்கில் நடைபெற்றது.

குறித்த விழாவிற்காக 37 பேரை யாழ் மாவட்ட செயலகம் பரிந்துரை செய்த நிலையில் 31 பேர்கள் தெரிவு செய்யப்பட்டதாக யாழ் மாவட்ட செயலகத்தினர் தெரிவித்திருந்தனர்.

இதில் அன்ரனி சவரிமுத்து ,பத்திநாதன் சைமன்.(ஊர்காவற்துறை), கனகரட்ணம் பேரின்பநாயகி, பிரான்ஸிஸ் ஜுலிஸ் கொலின். சபாவதிபிள்ளை பாலசிங்கம் , முடியப்பு சிங்கராஜா , நகமணி கோபாலகிருஸ்ணா( யாழ் நகரம்)

கபிரியேல் பிலந்திரன்.- அல்லைப்பிட்டி சின்னத்துரை நவரட்ணம் – கரவெட்டி வேலுப்பிள்ளை நடராசா, வேலாயு தபிள்ளை – காரைநகர், வேலாயுதம் விநாசித்தம்பி,- மிருசுவில்,வல்லிபுரம் குமாரசாமி,பாலசுப்பிரமணிய ஐயர் பால ச்சந்திரன், ரவீந்திர கிரிஷாந்தி – சுன்னாகம், பிரம்மஸ்ரீ வைத்தீஸ்வர சர்மா, நித்தியானந்த சர்மா கொக்குவில் கந்தையா மருதம் – வேலணை, நடராசா நாகராசா, மைக்கல் அல்வின்ராஜ்,செல்லையா சிவபாதம் பண்டத்தரிப்பு, கைலாயபிள்ளை தர்மகுலசிங்கம் – அல்வாய்,ஐயம்பிள்ளை சின்னராசா, செல்லத்துரை சிவசுப்பிர மணியம் – மூளாய்,கந்தர் வைத்தியலிங்கம் குணசேகரம், கனகசபை இராஜலிங்கம் – கோப்பாய்,சின்னத்தம்பி திவ்யநாயகம்-புத்தூர்,கிருஸ்ணசாமி வேதநாயகம் – மீசாலை,கந்தன் பாலன் – வல்வெட்டித்துறை ரட்ணம் சத்தியானந்தம் – பருத்தித்துறை,சுந்தரமூர்த்தி ஐயர் வரதராசன் – தெல்லிப்பளை,விமலாதேவி நாகேஸ்வரன் – இணுவில்

ஆகிய 31 பேருமே யாழ்.மாவட்டத்திலிருந்து கலாபூசண விருதுக்கு  தெரிவு செய்யப்பட்டு-23.12.2016 அன்று விருதினை பெற்றுக் கொண்டனர்.image-0-02-06-3a9d9f479681644da523e44ade5ba625f970fbb127e80159495361b026c90c97-v image-0-02-06-43e1c2d713c8f9782d193abe617bea0398dccc26f233c7bd495175a19992c78b-v image-0-02-06-9789bcc478ff9fa93ff28ae686f76e0b8a8f97e52da4315fabaa8477c3dd6998-v image-0-02-06-cdff3604942190c269dd4aff8010adccf15e4f342530aa8e47a6dcd01eed0f70-v15665876_1183755365044027_2253180930948075161_n image-0-02-06-75b36a419016b31313068c26fb69f4b6344f2b555b093bbde0bf9b7525f67c8b-v image-0-02-06-e34f9cab964c9c3934e86bd29c64edb5b449ea8d0eb4fae49ffde0bdd5e12adc-v image-0-02-06-f087d437dd304f9a95ee4e9bc4fd987d7029eaff006f939c77b94c7b8caeb162-v image-0-02-06-ff18757bd8db30932d93339038f9ed09d8851fbffbcaf18c2f02193fd6f5bd0b-v

Leave a Reply