அல்லைப்பிட்டி தோட்டப் பகுதி ஊடாக, தெற்கு கடற்கரை வரை செல்லும் – ஊரி வீதியினை,தார் வீதியாக மாற்றும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தற்போது இரவு பகலாக,நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வேலணை பிரதேச செயலகத்தின் ஊடாக-40 லட்சம் ரூபா செலவில்-இவ்வீதியானது தார் வீதியாக மாற்றப்பட்டு வருவதாக மேலும் தெரிய வருகின்றது.
இதே போல் அல்லைப்பிட்டிச் சந்தியிலிருந்து ஊருக்குள் வரும் பிரதான வீதியும்-வடமாகாண சபையினால் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் புனரமைக்கப்படவுள்ளதாக மேலும் அறிய முடிகின்றது.