யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களுக்கிடையில் நாடாத்தப்பட்ட இனிய குரலுக்கான தேடல் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் 10.12.2016 அன்று பணிப்பாளர் வைத்தியர்.த.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் என்.. சண்முகலிங்கன் (முன்னாள் துணைவேந்தர், யாழ் பல்கலைக்கழகம்) சிறப்பு விருந்தினராக வைத்தியர்.எஸ்.ரவிராஜ் (பீடாதிபதி, மருத்துவபீடம், யாழ் பல்கலைக்கழகம்) கௌரவ விருந்தினராக திருமதி கிருபாசக்தி கருணா (முதுநிலை விரிவுரையாளர், இசைத்துறை, யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இனிய குரலுக்கான தேடல் போட்டி நிகழ்வு சினிமா இசை, கர்நாடக சங்கீத இசை என இரண்டு பிரிவுகளாக மூன்று தடவைகள் நடைபெற்றது.
இறுதிப் போட்டி நிகழ்வில் சினிமா இசைக்கு நடுவர்களாக இசையமைப்பாளர் கண்ணன், இசையமைப்பாளர் ரமணன், முதுகலை மாணி ரோசிற்றா ஆகியோரும் கர்நாடக சங்கீத இசைக்கு நடுவர்களாக சங்கீத வித்துவான் பொன் ஸ்ரீவாமதேவன், முதுகலை மாணி துசிதா தர்மலிங்கம், முதுகலைமாணி மதுராங்கி சிறீதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதில் சினிமா இசை இறுதிப் போட்டியில் 11 பேர் போட்டியிட்டனர். அதில் முதலாம் இடத்தை தாதிய உத்தியோகத்தர் சின்னராசா சதீஸ்வரன், இரண்டாம் இடத்தை முகாமைத்துவ உதிவியாளர் திருமதி யூட் நிர்மலன் ஆன் சுபாசினி , மூன்றாம் இடத்தை சுகாதார உதவியாளர் கதிரவன் முருகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

கர்நாடக சங்கீத இசை இறுதிப் போட்டியில் 6 பேர் போட்டியிட்டனர். அதில் முதலாம் இடத்தை வைத்தியர் ஆரணி மருதையினார் இரண்டாம் இடத்தை தாதிய உத்தியோகத்தர் திருமதி குயிலினி சுரேஸ் , மூன்றாம் இடத்தை வைத்தியர் சிறிதரன் வினோதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


