அல்லையூர் இணையம் மேற்கொண்டு வரும் 1000 தடவைகள் அன்னதானம்-என்னும் பசிதீர்க்கும் அறப்பணியின் தொடர்ச்சியாக, 17.12.2016 சனிக்கிழமை அன்று கிளிநொச்சியில் இரு இடங்களில் விஷேட சிறப்புணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தைச் சேர்ந்த, திரு இ.சிவநாதன் அவர்கள் நேரடியாகச் சென்று இவ்விரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.
நிகழ்வு 01-
வேலணை மத்தியைச் சேர்ந்த, கனடாவில் வசித்து வரும் திரு திருமதி மோகனதாஸ் தம்பதியரின் செல்வப் புதல்வர்களான செல்வன் மோ.கவின் மற்றும் செல்வன் மோ.ஆரன் ஆகிய இருவரின் பிறந்த தினங்களை முன்னிட்டு கிளிநொச்சி இரத்தினபுரத்திலுள்ள விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பு என்ற சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு ஒருநாள் விசேட உணவு வழங்கப்பட்டதுடன் -மேலும் சிறுவர்இல்லத்தினர் திரு திருமதி மோகனதாஸ் தம்பதியினரின் புதல்வர்களின் பிறந்த தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார்கள் .
நிகழ்வு 02
பிரான்ஸில் வசிக்கும்-செல்வன் வினோதாஸ் மாக்ஸ் மாற்ரி அவர்களின் 24வது பிறந்த நாளினை முன்னிட்டு-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு விஷேட மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.இவ்வில்லத்தில் அதரவற்ற 410 மாணவ மாணவிகள் தங்கி கல்வி கற்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அல்லையூர் இணையம் மேற்கொண்டு வரும் 1000 தடவைகள் அன்னதானம்-என்னும் பசிதீர்க்கும் பணியின் 174 வது தடவையாக இச்சிறப்புணவு வழங்கப்பட்டுள்ளது -என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.