யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமையவுள்ள சுற்றுலா மையத்தின் ஆரம்ப கட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்.
யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன வீதிக்கு அண்மையில் 46 மில்லியன் ரூபா செலவில் கடற்கரையோர சுற்றுலா மையம் அமைக்கப்படவுள்ளது. இச் சுற்றுலா மையத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இவ் ஆரம்ப கட்ட பணிகளை யாழ், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கடந்த புதன்கிழமை (14/12/2016) நேரில் சென்று பார்வையிட்டார்.