அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,அமரர் திருமதி சீவரத்தினம் அன்னலட்சுமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-12.12.2016 திங்கட்கிழமை அன்று அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் ஏற்பாட்டில்,கிளிநொச்சியில் இரு அறப்பணி நிகழ்வுகள் நடைபெற்றன.இந்நிகழ்வுகள் இரண்டிலும் அன்னாரின் உறவினர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வு 01
கிளிநொச்சியில் அமைந்துள்ள விசேட தேவைக்குட்பட்டோர் இல்லத்தில் வசிக்கும்-எறிகணை வீச்சினால் பாதிக்கப்பட்டு இடுப்புக்கு கீழ் இயங்கமுடியாத நிலையில் கஸ்ரப்படும் சிறுவனின் மருத்துவ தேவைக்கென பத்தாயிரம் ரூபாக்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வு 02
கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.
இவ்விரு அறப்பணிகளையும் மேற்கொண்ட-அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு-எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன்-மேலும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!