தீவகம் மண்கும்பான் முருகன் கோவிலில் -அமரர் திருமதி லீலாவதி சின்னத்தம்பி அவர்களின் ஞாபகார்த்தமாக-மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அன்னதான மண்டபத்தினை -ஊரின் நன்மை கருதி பொது நிகழ்வுகளுக்கு பயன்படுத்தலாம் என இதனை அமைத்துக் கொடுத்த -பிரான்ஸில் வசிக்கும் திரு பேரம்பலம் சின்னத்தம்பி அவர்கள் எமது இணையத்திற்குத் தெரிவித்துள்ளார்.
இதனை பயன்படுத்த விரும்பம் உள்ளவர்கள் கோவில் நிர்வாகத்துடன் தொடர்பினை மேற்கொள்ள வேண்டும் என்றும்-அத்தோடு சமய ஆச்சாரியத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.