இவ்வருடம்,தீவகத்தில் பெரும் எண்ணிக்கையான விவசாயிகள் நெல் பயிரிடுவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைத்தீவாகிய மண்டைதீவிலிருந்து அனலைதீவு வரை காணப்படும்-வயல் நிலங்கள் அனைத்திலும் நெல் விதைக்கப்பட்டுள்ளதாகவும்-அண்மையில் பெய்தகடும் மழைக்குப் பின்னர் தற்போது வெயில் அடிப்பதனால்,பயிர்கள் செழித்து வளர்ந்து வருவதாகவும் பலர் எமது இணையத்திற்கு தெரிவித்தனர்.
கடந்த பல வருடங்களை விட-இம்முறை தீவக கிராமங்கள் அனைத்திலும் நெல் பயிரிடப்பட்டுள்ளதாக மேலும் அறிய முடிகின்றது.