யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்ற- கவிஞர் வேலணையூர் சுரேசின் நூல் வெளியீட்டு விழா-விபரங்கள் படங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்ற- கவிஞர் வேலணையூர் சுரேசின் நூல் வெளியீட்டு விழா-விபரங்கள் படங்கள் இணைப்பு!

15240274_1785305658384648_1438639349_nகவிஞர் வேலணையூர் இ.சுரேசின் மனவானின் மழைத்துளிகள் என்ற கவிதைத்தொகுதியின் வெளியீடு, திருக்கேதீச்சரம் சிவனருள் இல்லம் உருவாக்கிய வேலணை சுரேஸ் யாத்த அம்மை அப்பன் அருட்பாமாலை இறுவட்டு அறிமுகம், கவிஞருக்குக் கற்பித்த ஆசான்களுக்கான கௌரவிப்பு ஆகிய நிகழ்வுகள் 03.12.2016 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ் ராஜா கிறீம் ஹவுசின் கம்சியா மண்டபத்தில் நடைபெற்றன.
.
புளியங்கூடல் தாய்சக்தி கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் தீவகம் வடக்கு கலாசாரப் பேரவையின் உபதலைவர் க.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராஜாவும் சிறப்பு விருந்தினர்களாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக புளியங்கூடல் இராஜமகாமாரி அம்மன் ஆலய அறங்காவலர் சி.செந்தூரன், புதிய நதியா நகைமாட உரிமையாளர் ச.ஜெகதீஸ்வரன், நோபிள் பேப்பர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களான ச.சண்முகநாதன் மற்றும் கு.சிறீதர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
.
நிகழ்வில் வரவேற்புரையை ஆசிரியை சித்திரா பிரசன்னா ஆற்றினார். வாழ்த்துரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஓய்வுநிலைப் பிரதி முதல்வர் பண்டிதர் கலாநிதி செ.திருநாவுக்கரசு நிகழ்த்தினார். வலம்புரி நாளிதழ் ஆசிரியர் ந.விஜயசுந்தரம் சிறப்புரை ஆற்றினார்.
.
கவிதை நூலுக்கான மதிப்பீட்டுரையை கவிஞர் சோ.பத்மநாதனும் பாமாலை இறுவட்டிற்கான மதிப்பீட்டுரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசனும் ஆற்றினர். கவிஞர் சுரேசின் உயர்ச்சிக்கு வித்திட்ட ஆசான்கள் வரிசையில் ஓய்வு பெற்ற அதிபர் அ.அருமைநாயகம், ஓய்வு பெற்ற அதிபர் ச.வாமதேவன், ஓய்வு பெற்ற ஆசிரியை இ.யோகேஸ்வரி ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் ந.ஜெகநாதன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு உரையாற்றிய நிகழ்வின் தலைவர் யாழ்ப்பாண எழுத்தாளர்களின் புத்தகங்களை யாழ்ப்பாணப் புத்தகசாலைகளிலே காணமுடிவதில்லை இது வேதனைக்குரியது என்றார். முதன்மைவிருந்தினர் அமைச்சர் த.குருகுலராஜா, கவிஞர் சுரேஸ் கவிதைகளுடன் மாத்திரம் நின்றுவிடாது சிறுகதைகள், நாவல்கள் எனப் பலதுறைகளிலும் கால்பதிக்க வேண்டும். இந்த மண்ணின் குரலாக ஒலிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டார். சிறப்பு விருந்தினர் டாக்டர் த.சத்தியமூர்த்தி கவிதைகள் மன இறுக்கத்தைத் தளர்த்தக்கூடியவை. யாழ். போதனா வைத்தியசாலை பணியாளர்களுக்கு எதிர்வரும் சனவரி மாதத்தில் ஒரு கவிதைப்போட்டியை நடத்துவது பற்றித் தான் சிந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார். பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, தமிழ் சிறப்புக்கலை பயின்றவர்கள்கூடத் தமிழைப் பிழையாக எழுதுகின்றார்கள். அதைவிட இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம், பேராதனை, தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய மாணவர்களே தமிழ் பயில்கின்றனர் இது வேதனைக்குரியது என்றார். வலம்புரி ஆசிரியர் ந.விஜயசுந்தரம் சுரேசின் கவிதைகளுக்கு நிறைந்த வரவேற்பு உண்டு. முதலமைச்சரின் பாராட்டு அவருக்குக் கிடைத்தது வசிட்டர் வாயால் கிடைத்த ஆசீர்வாதம் போன்றது என்றார். பண்டிதர் கலாநிதி செ.திருநாவுக்கரசு கவிஞருக்கு சிறந்த ஓசை ஆளுமை இருப்பதாகத் தெரிவித்தார். கவிஞர் சோ.பத்மநாதன் யாழ்ப்பாணப் புத்தக விற்பனையாளர்கள் 40 வீத கொமிசன் கேட்பதால் அவர்களுக்கு புத்தகத்தை எழுத்தாளர்கள் கொடுக்க முன்வருவதில்லை என்றார். அத்துடன் சுரேசின் கவிதைகள் இயல்பாகவும் எளிமையாகவும் அமைந்திருப்பதாகத் தெரிவித்தார். விரிவுரையாளர் ச.லலீசன், போர்க்கால முயற்சிகளால்த்தான் ஈழத்து இசைப்பாடல்கள் எம்மிடையே பிரபலம் பெற்றன. அதன் விளைவாக இன்று ஈழத்து ஆலயங்களை மையப்படுத்திய பக்திப்பாடல்கள் மக்களிடையே வாழ்கின்றன என்றார்.

ஏற்புரையாற்றிய கவிஞர் சுரேஸ் தன்னை வளர்த்த கவிஞர் புதுவை இரத்தினதுரையை நினைவு கூர்ந்ததுடன் இவ்வெளியீட்டு நிகழ்வு நடைபெறும் நாள் கவிஞர் புதுவையின் பிறந்தநாளாக அமைந்திருப்பது விசேடமானது எனக் குறிப்பிட்டார்.
.
(படங்கள் நன்றி ஐ.சிவசாந்தன்)

img_6343-1 img_6354 img_6371 img_6372 img_6374 img_6376 img_6379 img_6380 img_6388 img_6391 img_6413 img_6421 img_6419 img_6426 img_6432 img_6429 img_6440 img_6443 img_6444 img_6445 img_6446 img_6447 img_6450 img_6458 img_6460 img_6462 img_6464 img_6465 img_6466 img_6467 img_6468 img_6469 img_6471 img_6472 img_6473 img_6476 img_6480 img_6482 img_6485 img_6487 img_6488 img_6492 img_6498 img_6502 img_6504 img_6514 img_6515 img_6520 img_6516

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux