புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களிடம்-அல்லைப்பிட்டியிலிருந்து மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம்-அல்லைப்பிட்டியில் பல சிறப்பான  அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.அதன் தொடர்ச்சியாக-தற்போது வேலணை செயலர் பிரிவில் அல்லைப்பிட்டிக்கிராமம் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு கணணி பயிற்சி வகுப்புக்கள் நடத்துவதற்காக- 15 இலட்சம் ரூபா பெறுமதயான உதவிகள் வழங்கப்படவுள்ளன.இக்கணணி வகுப்புக்கள் நடத்துவதற்கான  இடத்தினை-திரு சோமசுந்தரேசன் ராஜன் சேதுபதி அவர்கள் (பராசக்தி வித்தியாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள தமது இல்லத்தினை) வழங்கியுள்ளார்.மேலும் இதற்கான முதற்கட்டப்பணிகள் அல்லைப்பிட்டி மாதர் அபிவிருத்திச்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றது.அத்தோடு  இவற்றிக்குத் தேவையான மேலதிக சிறிய உதவிகளையே-புலம்பெயர் அல்லைப்பிட்டி மக்களிடம் இச்சங்கத்தினர் உரிமையோடு கோரிநிற்கின்றனர்.எமது கிராமத்தின் வளர்ச்சியில் அக்கறையுள்ள அனைவரும் ஒன்றுபட்டு இவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை  நாமும் உரிமையோடும் பணிவோடும் உங்களிடம் முன் வைக்கின்றோம்.

படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux