சர்வதேச மாற்றுவலுவுள்ளோர் தினத்தில்,சிறப்புணவு வழங்கிய அல்லையூர் இணையம்-படங்கள்,வீடியோ விபரங்கள் இணைப்பு!

சர்வதேச மாற்றுவலுவுள்ளோர் தினத்தில்,சிறப்புணவு வழங்கிய அல்லையூர் இணையம்-படங்கள்,வீடியோ விபரங்கள் இணைப்பு!

a-2-copy

சர்வதேச மாற்று வலுவுள்ளோர் தினமான(03.12.2016)  சனிக்கிழமை அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள மாற்றுவலுவுள்ள சிறுவர்களுக்கு ஒரு நாள்   சிறப்புணவு வழங்கப்பட்டது.

அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும் ஆயிரம் தடவைகள் அன்னதானம் என்னும் அறப்பணியின் தொடர்ச்சியாக 167 வது  தடவை  சிறப்புணவு வழங்கப்பட்டுள்ளது.

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி நாகேந்திரம் வள்ளியம்மை அவர்களின் 3ம் ஆண்டுநினைவு தினத்தினை முன்னிட்டு-அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில் வலுவிழந்த சிறுவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.

மாற்று வலுவுள்ளோருக்கான சிறப்பு நிகழ்வு

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் அமைந்துள்ள விசேட தேவைக்குட்பட்டோர் வலையமைப்பு என்ற சிறுவர் இல்லத்தில்-மாற்று வலுவுள்ளோருக்கான சிறப்பு நிகழ்வு உப தலைவர் பொன்.நித்தியானந்தன்அவர்களின் தலைமையில் காலை 10.மணியளவில் ஆரம்பமானது..
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பிரிவின் அதிகாரிகள்.கிளிநொச்சி மருத்துவ மனையின் மருத்துவர்கள்.உள்ளூர் பொது அமைப்பினர்கள்.கிராமசேவையலுவலகர்கள்.இல்லத்திலுள்ள சிறார்கள் அவர்களின் உறவினர்கள். இல்லத்தின் பணியாளர்கள் மற்றும் பணிப்பாளர் சபையினர். என பலரும் கலந்தது கொண்டனர் .

இந்நிகழ்வில் பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் – சிறார்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு  வந்தவர்களுக்கும்- இல்லச் சிறார்களுக்குமான மதிய உணவு- அல்லையூர் இணையத்தின் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வில்லத்தில் 18 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறார்கள் உள்ளனர்.இவர்களில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட(முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டசிறுவனும் உள்ளார்) சிறுவர்களும் அடங்குவர்கள் .பிறப்பிலேயே பாதிக்கப்பட்ட சிறார்களே கூடுதலாக உள்ளனர்.
இவ்வில்லத்திற்கான  ஒரு நாள் செலவு 16000-00ரூபாகள்  வரை முடிகிறது என  இவ்வில்த்தின் நிறுவனரும் இணைப்பாளருமாகிய  திரு. A.C. டயனியல் அவர்கள் கூறினார்.
அன்பான இரக்க குணம் படைத்த உறவுகளே உங்களால் முடிந்தளவு உதவிகள் செய்ய முன்வாருங்கள். அதாவது இருப்பவர் இல்லாதோருக்கு வழங்கினால் அது இறைவனுக்கு வழங்கியதாகும்.

a-1-1 a-3-1 a-4-1 a-5-1 a-6-1 a-9-1 a-10-1 a-12-1 a-13-1 a-14-1 a-15-1 a-17-1 a-20 a-21 a-23 a-25 a-26 a-27 a-29 a-32-1 a-33 a-34 a-35 a-36 a-37

Leave a Reply