மாவீரர் நினைவு தினமான இன்று (27.11.2016) தமிழர் தாயகம் எங்கிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய தினம் யாழ் தீவகம் வேலணை சாட்டியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்திலும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இவ்வஞ்சலி நிகழ்வானது இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.
கீழே கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் இல்ல அஞ்சலி வீடியோ இணைப்பு…