யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதரகத்தின் தூதுவர் ஏ.நடராஜன் அவர்களினால் கடந்த 15.07.2016 அன்று ஒரு தொகுதி இசைக்கருவிகள்-வேலணை மத்திய கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் கல்லூரியின் அதிபர் திரு சிவசாமி கிருபாகரன் அவர்களின் தலைமையில் -சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற,விழாவில் கலந்து கொண்ட தூதுவர் ஏ.நடராஜன் அவர்கள் இசைக்கருவிகளை வழங்கி வைத்ததாக மேலும் அறிய முடிகின்றது.
இவ்விழாவில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.