வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் பரிசளிப்பு விழாவின் நிழற்படத் தொகுப்பு!

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் பரிசளிப்பு விழாவின் நிழற்படத் தொகுப்பு!

unnamed-1

வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு  விழா கடந்த 18.11.2016 வெள்ளிக்கிழமை அன்று கல்லூரியின் அதிபர் சு. அமிர்தலிங்கம் தலைமையில்  கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி கல்லூரியின் பரிசளிப்பு  விழாவானது  நீண்டகாலங்களின் பின் கல்லூரி அதிபர் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திசங்கம்  மற்றும்  புதிதாக தெரிவு செய்யப்பட்ட பழைய மாணவர் சங்கம் என்பவற்றின் அயராத முயற்சியின் பயனாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரிசளிப்பு நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த  நிலையில் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக அவர்களால் பங்குபற்ற முடியவில்லை . இருந்தபோதும்  வடமாகாண சபை உறுப்பினர்களான திரு இ.இந்திரராஜா,திரு ம.தியாகராஜா வவுனியா  நகர கோட்ட கல்விபணிப்பாளர் எம்.பி.நடராஜ்,இந்துமதகுரு சிவஸ்ரீ.தியாக சக்திதரகுருக்கள்,  கிறிஸ்தவ மதகுரு அருட்பணி லகஸ்டன் டி சில்வா    மற்றும்   உதவிக்கல்வி பணிப்பாளர்கள்  அயல்பாடசாலை அதிபர்கள்  ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள்  எனப் பலரும்  கலந்து கொண்டனர்.

பரிசளிப்பு நிகழ்வின்போது 2015 இல் பாடசாலை மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற  மாணவர்களுக்கான பரிசில்கள்  வழங்கப்பட்டன.

அதேபோன்று  நீண்ட கால இடைவெளியின் பின் கல்லூரியின்  விபுலம் என்னும் சஞ்சிகையின்  நாலாவது இதழ் வெளியீடும் இடம்பெற்றது.

பரிசளிப்பு நிகழ்வின்போது  வவுனியா விபுலானந்த கல்லூரி  மாணவர்களின் விபுலம் இசைகுழுவினரின் இசைநிகழ்வும்  ,விபுல நர்த்தன கலாலய  மாணவர்களின் நாட்டிய நிகழ்வும் மற்றும் விபுலரங்க குழுவினரின் நாடக நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வுகளுடன் :கஜன்

unnamed-2 unnamed-1 unnamed unnamed-5 unnamed-3 unnamed-4 unnamed-8 unnamed-9 unnamed-10 unnamed-7 unnamed-11 unnamed-12 unnamed-13 unnamed-15 unnamed-17 unnamed-24 unnamed-6 unnamed-16 unnamed-18 unnamed-19 unnamed-22 unnamed-23 unnamed-21 unnamed-20

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux