முக்கிய செய்திகள்
         ***************************************
மண்டைதீவு 6ம் வட்டாரத்தை நிரந்தர முகவரியாகவும் மண்டைதீவு 4ம் வட்டாரத்தை தற்போதய முகவரியாகவும் கொண்ட செல்வி
கனகரட்ணம் பத்மினிமாலா(சாந்தி)அவர்கள்
26/06/2010சனிக்கழமை அன்று மண்டைதீவில்அகாலமரணமானார்அல்லைப்பிட்டி அந்தோனியார் ஆலைய வருடாந்த திருவிழா சிறப்பாக நடைபெற்று இறுதிநாளான
இன்று திருச்சுருபப்பவனியும் இடம்பெற்றது          அல்லைப்பிட்டி ஆயிரம் குடியேற்ற திட்டம்
**********************************************************************************


அல்லைப்பிட்டி அந்தோனியார் கோவிலை மையமாக வைத்து ஆயிரம்
வீட்டுகுடியேற்றத்திட்டம் கத்தோலிக்க திருச்சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நுாற்றுக்கணக்கான வீடுகள் கட்டி
முடிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து வீடுகள் கட்டும் வேலை
நடைபெற்றுவருகிறது.
                                                          
                        
வீதி திறப்பு                               
                         *********************                            

அல்லைப்பிட்டியையும் மண்டைதீவையும் இணைக்கும் உள் வீதியை மக்கள்
பயன்படுத்த. படையினர் அனுமதிவழங்கியுள்ளனர். 20வருடங்களுக்கு மேலாக
பயன்படுத்தாத இவ்வீதி தற்போது பழுதடைந்து காணப்படுவதாகவும் வாகன
போக்குவரத்துக்கு ஏற்றதாக இவ்வீதி இல்லையென்று இப்பகுதி மக்கள்
தெரிவிக்கின்றார்கள்


                                  அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் தெரிவிப்பு
                                  *************************************************
அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் திரு சின்னதுரை இரத்தினேஸ்வரன்(இரத்தினம்) அவர்களுடன் நாம் தொடர்பினை மேற்கொண்டபோது அல்லைப்பிட்டியில் தற்போது 400குடும்பங்கள் வரை மீள்குடியேறியுள்ளதாகவும். பாடசாலை 300க்கும் அதிகமான மாணவர்களுடன்
சிறப்பாக கல்வி போதிப்பதாகவும் அல்லைப்பிட்டி முழுவதற்கும் மின்சாரம்
வழங்கப்பட்டிருப்பதாகவும் அல்லைப்பிட்டி மக்களின் அடிப்படைவசதிகள்
யாவும் சீரமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்

.
உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் மக்கள் செல்ல அனுமதி
                         ***********************************************************
மண்டைதீவு பகுதியில் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலையத்துக்குள்
இருக்கும் பொதுமக்களின் வீடுகளையும் உடைமைகளையும் பார்வையிட.
கட்டம் கட்டமாக பொதுமக்களை படையினர் அழைத்துச்சென்றனர்மண்டைதீவு சுவிஸ் ஒன்றியம் தையல்மிசின் அன்பளிப்பு
*****************************************************************************
மண்டைதீவு மக்களுக்கு மண்டைதீவு சுவிஸ் ஒன்றியம் தையல்மிசின்களை
அன்பளிப்பாய் வழங்கியுள்ளது.வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கே இவ்வுதவி கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் சிறுகைத்தொழிலை ஊக்கப்படுத்துமுகமாகவும் தெரிவுசெய்யப்பட்ட.
பலருக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது


Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux