அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு எஸ்.ராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்களின் அன்புப் பேரனின் பிறந்த தினத்தில் நடைபெற்ற-அறப்பணி நிகழ்வுகளின் தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு எஸ்.ராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்களின் அன்புப் பேரனின் பிறந்த தினத்தில் நடைபெற்ற-அறப்பணி நிகழ்வுகளின் தொகுப்பு!

s-3-2

அல்லையூர் இணையத்தின் வளர்ச்சிக்கும்,அறப்பணிக்கும் தொடர்ந்து உதவி வழங்கி வரும்-பிரான்ஸில் வசிக்கும் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு எஸ்.ராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்களின் அன்புப் பேரன் செல்வன் சாருஷ்,இன் 2வது பிறந்த தினமான 21.11.2016 திங்கட்கிழமை அன்று-அல்லையூர் இணையத்தின் அறப்பணிக்குடும்பத்தின் ஏற்பாட்டில்-சில அறப்பணி நிகழ்வுகள் நடைபெற்றன.

விபரங்கள் வருமாறு…

01-கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு ஒருநாள் விசேட சிறப்புணவு வழங்கப்பட்டது.

படங்கள் கீழே இறைக்கப்பட்டுள்ளன.

02-இந்த இல்லத்தில் வசித்து வரும்- பிறவியிலேயே நடக்க முடியாமலும்-சிறுநீரகம் பாதிக்கப்பட்டும் கஸ்ரப்படும்-சிறுவனின் மருத்துவ செலவுக்கென -கிளிநொச்சி மக்கள் வங்கியில் இன்றைய தினம் வங்கிக்கணக்கு திறக்கப்பட்டு 10ஆயிரம் ரூபாக்கள் வைப்பிலிடப்பட்டது.

படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

03-யாழ் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் முதியோர் இல்ல முதியவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.

படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

வன்னி முறிப்பில் இயங்கும் யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர்களுக்கும் சிறப்புணவு வழங்கப்பட்டது.அத்தோடு அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்திலும் விஷேட அபிஷேக அன்னதான நிகழ்வும் இடம் பெற்றது.

ஒரே நாளில் இத்தனை அறப்பணி நிகழ்வுகளைச் செய்வதற்கு காரணமான செல்வன் R.K.SARUSH -க்கு என்றும் அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் துணை நிற்க வேண்டி வாழ்த்துகின்றோம்.

 கீழே வீடியோ-படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


s-4-1 s-8 aa-12 aa-13 aa-11 aa-20 aa-14 aa-21 aa-18 aa-20 aa-17 aa-16 aa-15 aa-21 aa-23 aa-22 aa-1 aa-3 aa-10 aa-8 aa-6 aa-9 15128718_1263751240365802_633653846_n aa-36 aa-26 aa-27 aa-34 aa11-3 aa11-4-1 aa11-5 aa11-6

Leave a Reply