யாழ் தீவகம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்காக கட்டப்பட்ட வெளி நோயாளர் பிரிவின் கட்டட திறப்பு விழா. 19.11.2016 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
இக் கட்டிடம் சுமார் 65 மில்லியன் ரூபாய் செலவில் MJF அறக்கட்டளை எனும் அமைப்பினால் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்காக கட்டப்பட்டது.
MJF நிறுவனம், MJF அறக்கட்டளை அமைப்பின் தலைவருமான Mr.Merril.J.Fernando அவர்களினால் இக் கட்டடம் வைபவ ரீதியாக சனிக்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக MJF குழும இயக்குனர்கள், Mr.Ravi thambaiya( தலைவர் ரேணுகா கொட்டேல்ஸ், கொழும்பு ), Mr.S.Thiruvakaran (செயலாளர், சுகாதார, சுதேச அமைச்சு,வட மாகாணம் ),Dr.A.Ketheswaran ( சுகாதார சேவைகள் பணிப்பாளர், வட மாகாணம் ),Dr.K.Nanthakumaran (பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் ),Dr.S.Nithiyananda (திட்டமிடல் வைத்திய அதிகாரி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, யாழ்ப்பாணம் ) ,Mrs.E.Anton Yoganayakam (பிரதேச செயலர், ஊர்காவற்றுறை ),Mr.M.G.Kandeeban (Accountant, இந்து சமய,கலாச்சார அலுவல்கள், திணைக்களம்) ஆகியோர் கலந்து கொண்டதுடன் மேலும் வைத்தியர்கள், திணைக்களத் தலைவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இக் கட்டிடத்தில் வெளி நோயாளர் பிரிவு, மருந்தகம், ஆய்வு கூடம், அவசர சிகிச்சை பிரிவு, X-Ray பிரிவு ,பற்சிகிச்சை பிரிவு, நிர்வாக பிரிவு போன்றன அமைந்துள்ளன.