யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியலட்சுமி பிள்ளையினார் அவர்கள் 14-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 15.11.2016 செவ்வாய்க்கிழமை அன்று வேலணையில் நடைபெற்றது. அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பிள்ளையினார் அவர்களின் அன்பு மனைவியும், முத்துலிங்கம்(தென்மராட்சி ஓய்வுநிலை பிரதி கல்விப் பணிப்பாளர்), படிகலிங்கம், காலஞ்சென்ற தர்மலிங்கம், அமிர்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும், திலகவதி அவர்களின் அன்புச் சகோதரியும், அருள்லிங்கம், வளர்மதி, பாஸ்கரலிங்கம் ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும், செந்தில்ராணி, அமுதினி, புஸ்பவதி, ஸ்ரீதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும், மகாலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும், குருபரன், அபிராமி, அறிவரசி, யதார்த்தன், ஜனன், யாதினி, மதன், ஜென்னி, மிதுஜா, ஜனுஜா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், யோகராணி, நவகுமார், சகுந்தலா ஆகியோரின் பெரிய மாமியாரும், நிதார்த்தன், நிஜீபன், நியூரியா ஆகியோரின் பெரிய அப்பம்மாவும், லெட்சனா, தர்சனா, விதுனா ஆகியோரின் பெரிய அம்மம்மாவும், கலைச்செல்வி, சிந்துவி, கமலகஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஆருத்திரா, நிகிஷன், அகிஷன், சஞ்சித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 15-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||
|