அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்களின் புதல்வன் செல்வன் எழிலனின் 16 வது பிறந்த நாளான 08.11.2016 செவ்வாய்க்கிழமை அன்று-கிளிநொச்சியில் இயங்கும் விசேட தேவைக்குட்பட்ட வலையமைப்பின் இல்லத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.
இப்பிள்ளைகளில் பலர் பிறவியில் உடல் உறுப்புக்கள் செயற்பட முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள் என்றும்-இடம்பெற்ற கொடிய யுத்தத்தினால் உடலுறுப்புக்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 132 பேர் இனம் காணப்பட்டுள்ளதாக -விசேட தேவைக்குட்பட்ட வலையமைப்பின் பணிப்பாளர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.
இவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு-அரசாங்க அதிகாரிகளோ அல்லது பொது அமைப்புக்களோ முன் வரவில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும்-1000 தடவைகள் அன்னதானம் என்னும் அறப்பணியின் 162 வது தடவையாகவும்-முதற் தடவையாக இங்கும் சிறப்புணவு வழங்கப்பட்டது.
இன்றைய சிறப்புணவு வழங்கும் நிகழ்வில்-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தைச் சேர்ந்த,திரு இந்துநாதன் சிவநாதன் அவர்கள் நேரடியாகச் சென்று கலந்து கொண்டார்.
கிளிநொச்சியில் தற்போது இயங்கி வரும்-இந்த விசேட தேவைக்குட்பட்டோர் வலையமைப்பு பற்றிய மேலதிக விபரங்கள் விரிவாக பின்னர் இணைக்கப்படும்.