இறந்த ஆத்துமாக்கள் தினமான 02.11.2016 அன்று-மண்டைதீவு பேதுருவானவர் சேமக்காலையில் புதிதாகக் கட்டப்பட்ட ஆலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டு-இறந்த ஆத்துமாக்களுக்கான விஷேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கடும் மழையையும் பொருட்படுத்தாது பெருமளவான மக்கள் கலந்து கொண்டதாக தெரிய வருகின்றது.
இதேபோல் அல்லைப்பிட்டி சேமக்காலையிலும் -அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்திலும் விஷேட வழிபாடுகள் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.