பிரான்ஸ் பாரிஸ் நகரில் திடீர் என ஆற்றுக்குள் பாய்ந்தது பேரூந்து! ரசித்து பார்த்த உல்லாசப்பிரயாணிகள்!
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் “செயனே”ஆற்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டு இருந்த பேருந்தின் பிரேக் திடீர் என செயல் இழந்தமையால் அப் பேருந்து உருண்டு சென்று “செயனே” ஆற்றுக்குள்ளே விழுந்தது. இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை (29 ம் திகதி) நடை பெற்றதாகும். ஆற்றின் வேகம் காரணமாக பேருந்து மிக வேகமாக இழுத்து செல்லப்பட்டு சில நிமிடங்களிலேயே ஆற்றில் முற்று முழுதாக மூழ்கியது. உடனே அங்குவந்த தீயணைப்பு படையினராலும் எதுவும் செய்ய முடியவில்லை.அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் இச் சம்பவத்தை நேரில் கண்டனர்.


Leave a Reply