அல்லைப்பிட்டி வாரிசுகளின் அரிய சாதனை!

ஜெர்மனியில் வாழும் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த திரு தனபாலசிங்கம் ஹரிகரனின் புதல்வர்களான திரு ஹரிகரன் சிந்துஜன்,ஹரிகரன் யானுஜன் ஆகிய இருவரும். கடந்த 4 வருடங்களாக இளையோர்களுக்கான மோட்டார் கார் பந்தயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கேடயங்களையும்,பரிசில்களையும்,பெற்று
வருகின்றார்கள்.இந்த வருடம் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவு
செய்யப்பட்டுள்ள இவர்கள்,அடுத்து வரும் மூன்று வாரங்கள் ஜெர்மனியின்
பலபகுதிகளிலும் நடைபெறும் போட்டிகளில் பங்குபெற்ற தயாராகி வருகின்றார்கள். எம்கிராமத்தைச் சேர்ந்த இவ் அன்புச் செல்வங்கள்,இப்போட்டியில் வெற்றிபெற அல்லைப்பிட்டி மக்களும் அல்லையூர் இணையமும் வாழ்த்தி நிக்கின்றது.

மேலே உள்ள நிழற்படம் தாம் பெற்ற பரிசில்களுடன் ஹ.சிந்துஜன் ஹ.யானுஜன்

Leave a Reply