தீவகம் வேலணைப் பகுதியில்,இறைச்சிக்காக வெட்டப்படும் பசுமாடுகள் -கடல்மார்க்கமாக நகருக்குள் கடத்தல்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் வேலணைப் பகுதியில்,இறைச்சிக்காக வெட்டப்படும் பசுமாடுகள் -கடல்மார்க்கமாக நகருக்குள் கடத்தல்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

img_20161016_111914

யாழ் தீவகத்தில் சமூக விரோதிகளால்,ஈவிரக்கமற்ற முறையில் கால்நடைகள் தொடர்ந்து  வேட்டையாடப்பட்டு வருவதாக -ஆதாரத்துடன் எமது  இணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16ம் திகதி மட்டும் வேலணைப் பகுதியில் ஏழு வரையான பசுமாடுகள் இறைச்சிக்காக  கொல்லப்பட்டு-யாழ் குடாநாட்டுக்கு கடல் மார்க்கமாக கடத்தப்பட்டுள்ளதாக-வேலணையிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அல்லைப்பிட்டி தெற்குப் பகுதியில் நேற்று முன் தினம் மாடு ஒன்றினை கொல்வதற்கு  கத்தி வீசப்பட்டதாகவும்-படுகாயமடைந்த நிலையில் உரிமையாளரினால் காணப்பட்டு -பின்னர் கால்நடை வைத்தியர் வரவழைக்கப்பட்டு தையல் போடப்பட்டதாகவும்  தெரிய வருகின்றது.

கடந்த பல வருடங்களாக -சமூக விரோதிகளால்,ஈவிரக்கமற்ற வகையில் கால்நடைகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்ற போதிலும்-இதனை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட-அதிகாரிகள் கடுமையான நடைவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.

அடுத்து வரும் காலங்களில்-தீவகத்தில் கால்நடைகள் முற்றாக அழிந்து விடக்கூடிய அபாயமான நிலை தோன்றியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

 

img_20161016_111146 image-ed20f93550948d975f1c13711a68e828dba398772a031566607b0aa0be12408d-v image-d735da42cf7fdd8c7be1bf47cb34cb1bd9e624f4c1690610337589e35c45859a-v img_20161016_112648 img_20161016_112657 img_20161016_112003 img_20161016_112045 img_20161016_114100 1800424_1859644187509861_1595126190_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux