யாழில் நடைபெறும் திருவிழாக்களில் திட்டமிட்டு சங்கிலி தாலிக்கொடி அறுப்பு!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய தீர்த்தத் திருவிழாவில் நேற்று 12 தங்கச் சங்கிலிகள் களவு போயுள்ளன. தீர்த்தத்திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் இத் திருட்டு இடம் பெற்றுள்ளது. 

இது குறித்து உற்சவகாலப் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று முன்தினம் இரவு நான்கு சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மட்டும் 17 சங்கிலிகளும் ஒரு தாலிக் கொடியும் அறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Leave a Reply