அல்லைப்பிட்டி மக்கள் ஒன்றியம் கனடாவில் உதயம்!!!
கனடா வாழ் அல்லைப்பிட்டி மக்கள் மாபெரும் ஒன்று கூடலை கனடாவில் நடத்தினார்கள்.22/08/2010 ஞாயிறு அன்று மாலை 5மணிக்கு பெருந்திரளாக
கனடாவிலுள்ள,milliken park இல் ஒன்று கூடிய அல்லைப்பிட்டி மக்கள் தம் 
அன்பை பரிமாறிக்கொண்டார்கள்.பின்னர் கனடாவாழ் அல்லைப்பிட்டி மக்கள்
ஒன்றிய நிர்வாகத்தேர்வு நடைபெற்றது.இத்தேர்வில் தலைவராக திரு பிலிப்பையா சகாயராஜா அவர்களும்,உபதலைவராக திரு சன்முகநாதன்
பிரபாகரன் அவர்களும்,செயலாளராக திரு ஞானப்பிரகாசம் ஜெயசீலன் அவர்களும்,உபசெயலாளராக திருமதி மனோகரி பாலசுப்பிரமணியம் அவர்களும் பொருளாளராக திரு அலெக்ஸான்டர் ரெஜினோல்ட் அவர்களும்
உப பொருளாளராக திருமதி சாந்தினி ஜெராட் அவர்களும்,ஆலோசகராக
திரு தில்லைநாதன் பரிமளகாந்தன் அவர்களும்,மற்றும் நிர்வாக உறுப்பினர்களாக முறையே,திரு மனுவேற்பிள்ளை ஸ்ரனிலோஸ்,திரு முத்துக்குமார் ஜெயா,திரு நடராஜா இளங்கோ,திருமதி உதயா பாலன்,திரு
வரப்பிரகாசம் மரியநாயகம்ஆகியோர்தெரவுசெய்யப்பட்டனர்.அதனைத்
தொடர்ந்து,இனிவரும் காலங்களில் தொடர்ந்து அல்லைப்பிட்டிக் கிராமத்திற்கு
உதவிகள் செய்வதெனவும் முடிவெடுக்கப்பட்டது.தொடர்ந்து இராப்போசன
விருந்துடன் ஒன்று கூடல் இனிதே நிறைவு பெற்றது.
அல்லையூர் இணையம் விடுத்திருந்த வேண்டுகோளை ஏற்று அல்லை பராசக்தி வித்தியாசாலைக்கு பிரதி எடுக்கும் இயந்திரம்(photo copy) வாங்கிக்கொடுப்பதற்காக நிதியும் சேகரிக்கப்பட்டது.
மேலே காணப்படும் நிழற்படம் கனடாவில் நடைபெற்ற
அல்லைப்பிட்டி மக்களின் ஒன்று கூடல் நிகழ்வு மேலும் 37 படங்கள்
 உள்ளே பதியப்பட்டுள்ளன!படங்களை பார்வையிட மேலும் வாசிக்க என்ற

எழுத்தின்மேல் அழுத்தவும்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux