அல்லைப்பிட்டியில் இயங்கும் இரு பாடசாலைகளான,பராசக்தி வித்தியாலயம் மற்றும் றோமன் கத்தோலிக்க த.க. வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளிலும் வெகு சிறப்பாக வாணி விழா நடைபெற்றது.
றோமன் கத்தோலிக்க த.க. வித்தியாலயதில் அதிபர் எம்.பத்மநாதன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற-வாணி விழாவில்,சிறப்பு விருந்தினராக,லண்டனில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,சமூக ஆர்வலர் திரு ராஜன் சேதுபதி அவர்கள் கலந்து கொண்டார்.மழலைகளுக்கு அதிபர் பத்மநாதன் அவர்களினால் ஏடு தொடக்கி வைக்கப்பட்டதுடன் -மேலும் இரு பாடசாலைகளிலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றதாக தெரிய வருகின்றது.