62 வயது முதியவரை கத்தியால் குத்திய மர்மநபர் யாழில் சம்பவம்!

மருதனாமடத்தில் இயங்கிவரும் அருளகம் மகளிர் இல்ல காவலாளி இனந்தெரியாத நபர் ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.இச்சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிரஸ்தாப நபர் காவற் கடமையில் ஈடுபட்டிருந்தபோது அங்குவந்த மற்றொரு நபர் இவரின் மீது கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

இத்தாக்குதலில் லக்ஸ்மனன் (வயது 62) என்பரே படுகாயமடைந்தவராவார். இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச் சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux