மட்டக்களப்பில் மண் லொறி மோதி மாணவி மரணம்

மட்டக்களப்பு நகரில் இன்று காலை 7.00 மணியளவில், மண் லொறியொன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார். 

மட்டக்களப்பு வின்ஸன்ட் உயர்தர மகளிர் பாடசாலையில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர வகுப்பில் கல்வி கற்கம் சற்குணம் கோகிலா எனும் மாணவியே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
 

இம்மாணவி பிரேத்தியேக வகுப்புக்காக மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலைய வீதியால் வந்த கொண்டிருந்த போது, மண் ஏற்றி வந்த செங்கலடியைச் சேர்ந்த லொறியொன்று மாணவிமீது மோதியுள்ளது. 

இவ்விபத்தில் உயிரிழந்த மாணவியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இம்மாணவியை மோதியதாக லொறி சாரதி சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Leave a Reply