பொம்மைகளுடன் சேர்த்து நிஜபுலிக்குட்டியை கடத்திய பெண்!

தாய்லாந்தில்    பொம்மைகளுடன் சேர்த்து    புலிக்குட்டியை கடத்த முயற்சிதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஈராக் செல்ல ஒரு பெண் விமான நிலையத்துக்கு வந்து இருந்தார். அவரது பொருட்களை எக்ஸ்ரே மூலம் விமான நிலைய ஊழியர்கள் பரிசோதனை 
செய்தனர்.
அப்போது அவர் கொண்டு வந்த மொம்மைகளுடன் ஒரு புலிக்குட்டியும் இருந்தது தெரியவந்தது. உடனே காட்டு இலாகாவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த புலிக்குட்டியை பறிமுதல் செய்தனர். அது பிறந்து 2 மாதமே ஆன குட்டியாகும்.

இந்த புலிக்குட்டியை கடத்த அப்பெண் முயற்சி செய்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே அவரிடம் விசாரணை நடக்கிறது.

Leave a Reply