யாழ் நல்லூரில் பெண்களிடம் சேட்டை விட்ட இளைஞரை நையப்புடைத்த இராணுவம்!

நல்லூர் திருவிழாவை இன்று முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் யுவதிகள் இருவர் மீது அங்க சேஷ்டை புரிந்து தொல்லை கொடுத்த இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப் புடைக்கப்பட்டார்.
நல்லூர் இரண்டாம் கட்டைவீதி வழியாக மாலை 6 மணியளவில் யுவதிகள் இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்களை இந்த இளைஞன் பின்தொடர்ந்து சென்றிருக்கின்றார்.
அங்க சேட்டையும் புரிந்துள்ளார். இதனையடுத்து யுவதிகள் இருவரும் அவ்வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இராணுவத்தினரிடம் முறையிட்டனர்.

அதைத் தொடர்ந்து இளைஞரை மடக்கிப் பிடித்த இராணுவத்தினர் அவரை மதில் ஒன்றுடன் நிற்க வைத்து நையப் புடைத்தனர். அத்துடன் இரு யுவதிகளிடமும் மன்னிப்புக் கோர வைத்தனர். பின் இளைஞன் விடுதலை செய்யப்பட்டார்.

Leave a Reply