இதுவும் இப்போது முக்கியம்

பிரபுதேவா & நயன்தாரா டிசம்பரில் திருமணம்

சென்னை : பிரபுதேவா, நயன்தாரா திருமணம் டிசம்பர் மாதம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நயன்தாரா, சமீபகாலமாக புதிய படங்கள் 
எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.
‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் மட்டும் நடித்து வந்தார். அதையும் முடித்துவிட்டார். கன்னடம், தெலுங்கு மொழிகளில் ஒப்புக்கொண்டிருந்த படங்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார். புதிய பட வாய்ப்பு எதையும் ஏற்கவில்லை.
இதனால் பிரபுதேவாவும் நயன்தாராவும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி உள்ளது. டிசம்பரில் இவர்கள் திருமணம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றி நயன்தாரா மானேஜரிடம் கேட்டபோது, ‘கைவசம் உள்ள படங்களை நயன்தாரா முடித்துக்கொடுத்துவிட்டார்.
புதிய படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. மற்றபடி வேறு எதுவும் தெரியாது’ என்றார். பிரபுதேவா ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux