இலங்கை அரசாங்கத்தினால், புகையிலை உற்பத்திக்கெதிராக-எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திருசிவஞானம் சிறிதரன் அவர்கள் ஞாயிறு அன்று வேலணையில் நடைபெற்ற- பள்ளம்புலம் முருகமூர்த்தி சனசமுக நிலையத்தின் 35வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய போது தீவக விவசாயிகளுக்கு தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகளின் அடிப்படையில்-இந்த வருடம் முதல்-தீவகத்தில் புகையிலைச் செய்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்செய்தியினை திரு சிறிதரன் அவர்களின் கவனத்திற்குகொண்டு சென்றதனையடுத்து-அவர் கடந்த பாராளுமன்றக் கூட்டத்தில் இது சம்பந்தமாக கேள்வி எழும்பினார் என்றும்-கேள்விக்குப் பதில் கூறிய அமைச்சர்-அரசாங்கத்தால் புகையிலை உற்பத்திக்கு எதிராக எந்தவிதமான தடையும் பிறப்பிக்கப்படவில்லையென்று தெரிவித்தார்.என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவகத்தில் ஊர்காவற்றுறை மற்றும் வேலணை பிரதேச செயலகங்களின் ஊடாக-புகையிலை உற்பத்திக்கு எதிரான அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தீவகத்தில் இந்த வருடம் முதல் புகையிலை உற்பத்திக்குத் தடை-விபரங்கள் இணைப்பு!
தீவக விவசாயிகளினால்,பணப்பயிர் என்று அழைக்கப்பட்டு வந்த புகையிலை உற்பத்திக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தீவகத்தில் முன்னர் பெரும்பாலான விவசாயிகளினால் விரும்பி புகையிலையே பயிரிடப்பட்டு வந்ததுடன்-அவை மொத்தமாக தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பணமாக மாற்றம் பெற்றதனால் பணப்பயிர் என்று விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.