மண்டைதீவில் மர்ம நபர்களால் வீடு ஒன்று சிதைக்கப்பட்டுள்ளது!

மண்டைதீவுப் பிரதேசத்தில் நேற்றிரவு சில வி­மிகளால் சேமன் கைலாசபிள்ளைக்குச் சொந்தமான, மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகா மையில் உள்ள  வீடு பலத்த சேதத்திற்குள்ளாக்கப்பட் டுள்ளது. நேற்றிரவு திடீரென வீட்டினுள் உட்புகுந்த சில வி மிகள் சுவர்களை உடைத்தும் வீட்டின் மேல் ஏறி ஓடுகளை கழற்றி வீசியும் வீட்டையும் சின்னாபின்னமாக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

அந்த வீட்டில் பகலில் இருக்கும் மூதாட்டியான திருமதி தெட்சணாமூர்த்தி லக்சுமிஅம்மா இரவில் உறவினர் வீட்டில் தங்கியிருப்பது வழக்கம்.
மேற்படி அந்த மூதாட்டி விடியற்காலை வந்து பார்த்தபோது வீடு பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளதை அறிந்து கிராம உத்தியோகத்தர் இ.ரமேஷ் அவர்களிடம் மேற்படி சம்பவத்தைத் தெரிவித்துள்ளார்.
மேற்படி வீட்டின் உரிமையாளர் யாழ்ப்பாணத்தில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமான விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply