வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா (06.010.2016) வியாழக்கிழமை பகல் 11.00மணிக்கு சிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமானது.
மேலும் சப்பர திருவிழா -13.10.2016 வியாழக்கிழமை இரவு 8.00 மணிக்கும்
தேர் திருவிழா -14.10.2016 வெள்ளிகிழமை காலை 10.25 மணிக்கும்
தீர்தோற்சவம் – 15.10.2016 சனிகிழமை பகல் 11.00 மணிக்கும்
திருக்கல்யாணம் – 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கும்
ஆஞ்சநேயர் உற்சவம் 17.10.2016 திங்கட்கிழமையன்று காலை 10.30 மணிக்கும் இடம்பெற இருக்கிறது.
பக்த அடியார்கள் வருகை தந்து அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அருளை பெற்று கொள்ளும் வண்ணம் வேண்டப்படுகின்றனர்.
கீழே மூன்றாம் நாளான 08.10.2016 சனிக்கிழமை அன்று காய்கறி,மற்றும் பழங்களை கொண்டு சாத்துப்படி செய்து ஸ்ரீ தேவி பூதேவி சமேத மகா விஷ்ணுக்கு விசேட அபிசேகம் ஆராதனைகள் இடம்பெற்று இரவு மணியளவில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து யானை வாகனத்தில் உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்த காட்சி இடம்பெற்றது .
படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
படங்கள்-தகவல்கள்-வவுனியாவிலிருந்து திரு கஜன் அவர்கள்….