பெற்ற மகனை தன் கள்ளக்காதலுக்காய் கொடுரமாய் கொன்ற தாய்–

கள்ளக்காதலை கண்டித்ததால், 13 வயது மகனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், நளகொண்டா மாவட்டம், மிரியல்குடா மண்டலம், தமர்ச்சலா கிராமத்தை சேர்ந்த 32 வயது பெண் ஷிவமணி. அவருடைய 13 வயது மகன், தாயாரின் கள்ளக்காதலை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஷிவமணி, பெற்ற மகன் என்றும் பாராமல், அவனை வீட்டிற்கு அருகில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து உடலில் மின்சாரத்தை பாய்ச்சினாள். இதனால் உடல் கருகிய சிறுவன் துடிதுடித்து இறந்தான்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று ஷிவமணியை கைது செய்தனர். விசாரணையில், கள்ளக்காதலை கண்டித்ததால், ஷிவமணி மகனை கொலை செய்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். ஆனால், ஷிவமணி இந்த புகாரை மறுத்தார்.
மகன் பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல், வேலைக்கும் போகாமல் சமூக விரோத செயலில் ஈடுபட்டதாகவும் அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும், ஷிவமணி போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் ஷிவமணி மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux