பாம்பு தீண்டி சிறுவன் பரிதாப மரணம் கிளிநொச்சியில் —–


கிளிநொச்சி,ஓக.29
உறக்கத்தில் இருந்த வேளையில் சிறு வனைத் தீண்டியது விஷப் பாம்பு. மறு நாள் சிகிச்சை பயனளிக்காத நிலையில்  அந்தச் சிறுவன் மரணமானான்.
உருத்திரபுரம் வடக்கைச் சேர்ந்த ஞான சீலன் நிலக்ஸன் றொபேட்(வயது 10) என்ற சிறுவனே மரணமானவர் ஆவார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதா வது:
அண்மையில் மீள்குடியமர அனுமதிக் கப்பட்ட உருத்திரபுரத்தில் சிறுவனின் குடும்பத்தினர் தறப்பாளால் குடிசையை அமைத்து வசித்தனர். கடந்த  26ஆம் திகதி வியாழக்கிழமை இரவு சிறுவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது பாம்பு தீண்டியுள்ளது.


பாம்பு தீண்டியதை அறியாத நிலை யில் அதிகாலை வேளை சிறுவன் வயிற்று நோவால் துடித்துள்ளார்.
இதனையடுத்து மயக்கமடைந்த சிறு வனை அதிகாலை 3 மணிக்கு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பெற்றோர் அவரச மாகக் கொண்டு சென்றனர்.
சிறுவன் மரணமடைந்திருக்கலாம் என்று எண்ணிய வைத்தியர்கள் சிறுவ னின் உடலில் சிறு அசைவுகளை அவதா னித்தனர். இதனையடுத்து உடனடியாக அம்புலன்ஸ் மூலமாக யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலைக்குக் கொண்டு வரப்பட்டார்
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனு மதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பயனின்றி சிறுவன் நேற்று முன்தினம் அங்கு மரண மானார். புனித பற்றிமா பாடசாலையின் மாணவனான இவர், கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக் குத் தோற்றியிருந்தார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux