வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய விழா தொடக்கம்

Velankanniவேளாங்கண்ணணி: நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கீழை நாடுகளின் லூர்து என போற்றி புகழப்படுவது புனித ஆரோக்கிய மாதா பேராலயம். இந்தியாவில் உள்ள சில பசிலிக்கா எனப்படும் பேராலயங்களில் இதுவும் ஒன்று.

இங்கு ஆண்டுதோறும் புனித ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா பெரும் விழாவைக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தையொட்டி நேற்று மாலை 5.45 மணிக்கு புனித ஆரோக்கிய அன்னையின் திருஉருவம் பொறித்த திருக்கொடி பவனி நடந்தது.

பின்னர் தஞ்சை ஆயர் எம்.தேவதாஸ் அம்புரோஸ் திருக்கொடியை புனிதம் செய்தார். அதனை தொடர்ந்து மாலை 6.50 மணிக்கு பேராலயத்தையொட்டி வடக்குபுறம் 90 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் கொடியேற்றி வைக்கப்பட்டது.

பேராலயத்தை சுற்றி 4 இடங்களில் ஒலி, ஒளி அமைப்புடன் கூடிய அகன்ற திரையில் கொடியேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனால் வேளாங்கண்ணியின் பல்வேறு பகுதியில் திரண்டிருந்த மக்கள் [^]கொடியேற்ற நிகழ்ச்சியை பக்திபரவசத்துடன் கண்டுகளித்தனர். 

கொடியேற்றப்பட்டு 10 நிமிடங்களுக்குப் பின் பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர், தமிழில் திருப்பலி ஆகியவை நடந்தது. 

Leave a Reply