தீவகம் வேலணை கிழக்கு முதலாம் வட்டாரம் ஆலம்புலத்தைச் சேர்ந்தவரும்- தற்பாேது கனடாவில் வசித்து வருபவருமாகிய, திரு வேலுப்பிள்ளை இராசதுரை அவர்கள்-தனது 80வது பிறந்த தினத்தினை 06/10/2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் கொண்டாடுகின்றார்.
பெரியவர் திரு வேலுப்பிள்ளை இராசதுரை அவர்கள்-தமது பிறந்த நாள் அன்று-யாழ் கொழும்புத்துறையில் அமைந்துள்ள சென் ஜோசப் முதியோர் இல்லத்திற்கு அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் ஊடாக-ஒரு நாள்முழுமையான சிறப்புணவு வழங்கியுள்ளார்.
பெரியவருக்கு அல்லையூர் இணையத்தின் சார்பிலும்- சென் ஜோசப் முதியோர் இல்லத்தின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் மேலும் பெரியவர் திரு வேலுப்பிள்ளை இராசதுரை அவர்கள் சிறந்த ஆரோக்கியத்துடனும்- மகிழ்ச்சியாகவும் வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம் .