சுவிஸில் ஜம்பது ஆயிரத்தில்,சில ஆயிரங்கள் நாடு கடத்தப்படலாம்-இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து-விபரங்கள் ணைப்பு!

சுவிஸில் ஜம்பது ஆயிரத்தில்,சில ஆயிரங்கள் நாடு கடத்தப்படலாம்-இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து-விபரங்கள் ணைப்பு!

அகதிகளை நாடு கடத்துவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் நேற்று இருதரப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனேட்டா சொம்மாறுகாவுக்கும், இலங்கையின் உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நாவின்னவு க்கும் இடையில் இந்த உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டது.நாடுகடத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக இந்த உடன்பாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தாயகம் திருப்பி அனுப்பப்படும் இலங்கையர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டை சுவிஸ் அமைச்சர் நிராகரித்துள்ளார்.
முன்பு போலவே, இந்த உடன்பாட்டுக்கு அமையவும், ஒவ்வொருவரும் பரிசீலிக்கப்படுவார்கள்- யாருக்கு உதவி தேவை, யாருக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும், நாடு திருப்பி அனுப்புவது சாத்தியமா, நியாயமானதா என்று அனைத்தும், ஆராயப்படும். அங்கு எந்த மாற்றமும் இடம்பெறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிற்சர்லாந்தில் சுமார் 50 ஆயிரம் இலங்கையர்கள் குறிப்பாக தமிழர்கள் அடைக்கலம் தேடியுள்ளனர். இவர்களில் பல ஆயி ரக்கணக்கானோர் இன்னமும் அகதிகள் என்ற நிலையிலேயே உள்ளனர் என்பதும், நாடு திருப்பி அனுப்பப்படும் சூழலில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
swiss-lanka-agrement

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux