மைக்கல் ஜக்சன் உடலை மீண்டும் தோண்டி எடுக்கத் திட்டம் _

மறைந்த உலகப்புகழ் பெற்ற பொப் பாடகர் மைக்கல் ஜக்சனின் உடலை மீண்டும் தோண்டியெடுத்துப் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

மைக்கல் ஜக்சன் கடந்த ஆண்டு மே மாதம் மர்மமான முறையில் இறந்தார். அவரது குடும்ப டாக்டர் கனாட் முர்றே கொடுத்த நச்சுத் தன்மை வாய்ந்த மருந்து மாத்திரைகளால் அவர் மரணம் அடைந்தது விசாரணையில் தெரிய வந்தது. 


எனவே டாக்டர் முர்றே மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து 3 தடவை நடந்த பிரேத பரிசோதனைக்கு பின் மைக்கல் ஜக்சனின் உடல் புதைக்கப்பட்டது. 

இது தொடர்பான வழக்கு அடுத்த ஆண்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது. 

இந்நிலையில் மைக்கல் ஜக்சன் தான் புது தெம்புடன் நடனம் ஆடுவதற்காக, அதிகளவில் மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்தியதாகவும், அதனால்தான் அவர் மரணத்தைத் தழுவியதாகவும் வாதாட திட்டமிடப்பட்டுள்ளது. 

எனவே புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை நடத்த ஒரு சாரார் திட்டமிட்டுள்ளனர். அதற்கான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இது மைக்கல் ஜக்சன் குடும்பத்தினரை அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.___ E-mail to a 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux