யாழ்ப்பாணத்தில் மாதா சிலை விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம் மாட்டீனார் குருமடத்திற்கு முன்னால் அமைந்துள்ள கொஞ்சேஞ்சி மாதாவின் புனித சிலை க்கு முன்னுள்ள உண்டியலும் திருச்சுருவ கண்ணா டியும் திட்டமிடப் பட்டு தீய சக்திகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மாட்டீனார் குருமடத்திற்கு முன்னால் அமைந்துள்ள கொஞ்சேஞ்சி மாதாவின் சிலை மரியன்னை  பேராலயத்தை முதன்மைப்படுத்தும் நோக்கில் ஆலய வளவுக்குள் நெடுங்காலமாக அமைந்துள்ளது.

கடந்த  வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாதாவின் திருச்சுருவ முன்பக்க கண்ணாடி கற்களால் சேதமாக்கப்பட் டுள்ளதுடன் மறைக்கல்வி வளவுக்குள் அமைக்கப்பட்டுள்ள உண்டியலும் உடைக் கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது.
எனவே உரியவர்கள் இப்புனித  பேராலயத்தின் மகிமையை பேணிப்பாதுகாப்பதுடன் இவ்வாறான செயலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply