3 தாலிக்கொடிகள்-பல சங்கிலிகள்-4கையடக்க தொலைபேசிகள்-16 ஆயிரம் ரூபா பணம் வாள்முனையில் கொள்ளை!

நள்ளிரவு நேரம் வீட்டை உடைத்து உட் புகுந்த கொள்ளையர்கள் வாள் முனையில் சுமார் முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் வீதியில் உள்ள வீடொன்றில் இடம் பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து கடந்த பத்து வாரங்களின் பின்னர் நல்லூர் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக உறவினர்களுடைய வீட்டில் வந்து தங்கியிருந்தவர்களின் சுமார் நூற்றி நாற்பது பவுண் நகைகள் மூன்று தாலிக்கொடிகள் மற்றும் சங்கிலிகள் காப்புகள் என பல பொருட்களும் கொள்ளiயார்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம்பற்றி மேலும் தெரிய வருவதாவது, வீட்டினுள் நுழைந்த நான்கு  கொள்ளையர்கள் வீட்டில் லைட்டைப் போட்டதுடன் முகங்களை வீட்டில் இருந்த துணிகளினால் எடுத்து மறைத்துக் கட்டியுள்ளார்கள்.
வீட்டில்  இருந்த மூன்று பெண்களையும் இரண்டு ஆண்களையும் வாள் முனையில் பிடித்து ஒரு அறையில் வைத்துக்கொண்டு பெண்களுடைய நகைகள் அனைத்தையும் பறித்தெடுத்ததுடன் ஆண்களை வெட்டப் போவதாகக் கூறி மிகுதி பொருட்கள் எங்கிருக்கின்றன எனவும் வெருட்டி ஏiனைய இடங்களில் இருந்து தேடி கையடக்கத் தொலைபேசிகள் நான்கும், பணம் 16 ஆயிரம் ரூபா என்பவற்றையும் கொள்ளையிட்டுக்கொண்டு சென்றுள்ளார்கள்.
இந்த கொள்ளை சம்பவம் சம்பந்தமாக யாழ்ப்பாணம் சீறீலங்கா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிசார் விசாரணைகளை மேற்க்கொண்டுள்ளாகள்.

Leave a Reply